May 09

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் அறிமுகமாகும் ஸ்ருதிஹாசன்

புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை ஸ்ருதிஹாசன் பங்கேற்கவிருக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வருகிற மே 17ஆம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 8ஆம் நூற்றாண்டின் இளவரசியாக ஸ்ருதி நடிக்கும் 'சங்கமித்ரா' திரைப்படத்தின் தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது.

இப்படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாள் சண்டை பயிற்சி எடுத்து வரும் நாயகி ஸ்ருதிஹாஸன் பேசுகையில், மிகவும் கவுரவமிக்க மேடை மூலம் சர்வதேச ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தை கொண்டு செல்வதை எண்ணி ஆர்வமாக இருப்பதாகவும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை இணைக்கும் படமாக இது இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். கேன்ஸ் விழாவில் நடைபெறும் 'சங்கமித்ரா' தொடக்கவிழாவில் படக்குழுவினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஸ்ருதிஹாசனை தவிர்த்து நடிகை எமி ஜாக்சனும் கேன்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்கவிருக்கிறார். எமி ஜாக்சன் கடந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் முதன் முறையாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.