Dec 19

சுவிஸில் செங்குத்தான ரயில் சேவை ஆரம்பம்

உலகின் மிக அதிக செங்குத்தான ரயில் சேவை, சுவிட்ஸர்லந்தில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

கலன்களைப் போல் காணப்படும் ரயில் பெட்டிகள், பயணிகள் எந்நேரமும் நேராக அமர்ந்திருப்பதை உறுதி செய்யும். நிலப்பகுதிக்கு ஏற்றவாறு ரயில்பெட்டியின் தரைப்பகுதி மாறிக்கொள்ளும்.

ஸ்ச்விஸ் நகரிலிருந்து ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள ஸ்டூஸ் கிராமத்துக்கு இடையே இந்த ரயில் செயல்படுகிறது. ஸ்டூஸ் கிராமத்தில் கார்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஸ்டூஸ் பாஹ்ன் ரயில்பாதையைக் கட்டி முடிக்க 14 ஆண்டு ஆனது. அது எதிர்பார்க்கப்பட்டதைவிட ஈராண்டு அதிகம். அதற்கான செலவு 52 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாகும்.

ரயில் கட்டுமானத்தின் நிறைவு அனைவரையும் பெருமையடையச் செய்ததாய் ரயில் சேவையின் பேச்சாளர் கூறினார்.