May 09

கண்ணகி கோவிலுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கண்ணகி கோவிலில் நாளை (10-ந் தேதி) நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழாவில் பங்கேற்க உள்ளேன்.

தமிழர்களின் பண்பாட்டை காக்க நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. மற்ற கட்சிகள் இதற்கு முன் வருமா என்று தெரியவில்லை.

கண்ணகி கோவில் திருவிழா மற்றும் சீரமைப்பிற்காக நாங்கள் வற்புறுத்தியதின் பேரில் தமிழக அரசு ரூ. 5 லட்சம் ஒதுக்கி உள்ளது. இந்த நிதி கோவிலில் எண்ணைக்கு கூட காணாது.

எனவே கூடுதல் நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.கேரள அரசு பக்தர்களின் உணர்வுகளை புரிந்து சபரிமலை செல்வதற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அது போல தமிழக அரசும் கண்ணகி கோவிலுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

பின்னர் அவரிடம் 3 அணியாக இருந்த அ.தி.மு.க. தற்போது 4 அணியாக செயல்படுகிறது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், எத்தனை அணிகள் உருவானால் என்ன? சனியும், பிணியும் பிடிக்காமல் இருந்தால் சரி தான் என்றார்.