May 09

வேலையற்ற பட்டதாரிகள் வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

   பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் 92ஆவது அமர்வு நடைபெற இருந்த நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இந்த நிலையில், வடக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள வந்த வடக்கு மாகாண முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை வெற்றி அளிக்க வில்லை என  தெரிவித்துள்ளார்.