May 09

பெண்கள் விஷயத்தில் அஜீத் அப்படி : பிரபல நடிகை!

பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜீத்தைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் சிறந்த மனிதர் என அவருடன் நடித்த பல நடிகைகள் இதற்கு முன்னர் கூறியுள்ளனர்.

நேர்மை, எளிமை போன்ற காரணங்களால் அவருக்கு ரசிகர்பட்டாளம் அதிகம். அவர் தற்போது ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தீவிரமாக உழைத்து தனது உடம்பை குறைத்து நடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் நடிகை காயத்ரி ரகுராமிடம்அஜித்தைபற்றிடுவிட்டரில்கேட்டுள்ளார்.

பொதுவாக சில நடிகைகள் ரசிகர்களுடன் டுவிட்டரில் அவ்வப்போது உரையாடுவார்கள்.

அப்போது அஜீத்தை பற்றி கேட்ட கேள்விக்கு நடிகை காயத்ரி ரகுராம்,‘‘தல அஜீத் ஒரு சிறந்த மனிதர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.