May 09

வவுனியா இ.போ.ச நேரக்கணிப்பாளரை சாரதி தாக்க முயற்சி!

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (08)  நேரக்கணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,பருத்தித்துறைலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் (பருத்தித்துறை டிப்போ) வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக தரித்து நின்றது. பஸ்ஸை வேறு இடத்தில் தரித்து நிறுத்துமாறு சாரதிக்கு வவுனியா இ.போ.ச நேரக்கணிப்பாளர் உத்தரவிட்ட போது. நேரக்கணிப்பாளரின் வார்த்தையினை மதிக்காது. அவ்விடத்திலிலேயே பேருந்தினை தரித்து விட்டு சென்று விட்டார்.

உடனடியாக நேரக்கணிப்பாளர் இ.போ.ச பருத்தித்துறை பஸ்ஸை எடுத்து போக்குவரத்துக்கு எவ்வித இடையூறு இன்றி தரித்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பருத்தித்துறை பஸ் சாரதி நேரக்கணிப்பாளரை தாகாத முறையில் பேசியதுடன் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளவும் முயற்சித்தார்.

அருகில் நின்ற இ.போ.ச ஊழியர்களால் பிரச்சனை சுமூகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டது.