May 09

சைட்டம் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விஷேட கலந்துரையாடல்

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்க உள்ளது.

அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒன்றுகூடி, இது குறித்த முக்கியமான தீர்மானங்களை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கூட்டத்தின் போது, போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும், அரசின் நடவடிக்கைகள் தொடர்பிலும், அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைட்டம் மருத்துவ கல்லூரி மூடப்படமாட்டாது எனவும், அதனை நடாத்திச் செல்வதில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சைட்டம் தனியார் மருத்துவக் கல்லுாரியை மூடிவிட வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.