Dec 15

அன்டன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுல்லை கைவேலியில் நடைபெற்றது.

வல்லைக்கடலோரம் உருவாகிய பெரும் விடுதலைதீயிற்கு உரமூட்டி கரம்சேர்த்து தமிழர்களின் உரிமைப்போரின் நியாயப்பாடுகளை சர்வதேசச் செவிகளுக்கு ஓங்கி ஒலிக்கச்செய்த தாயகத்தின் தேசத்தின்குரல் அன்டன் பாலசிங்கம் அவர்கள் மூச்சடங்கி இன்றோடு வருடம் பதினொன்று.

விடுதலையை வீச்சாக்க கனரகங்கள் எவ்வளவு அனல்கக்கியதோ அதற்கு சற்றும் குறைவின்றி உன் கர்ஜனை குரல்கொண்டு தேசவிடுதலையை செதுக்கிய தேசத்தின்குரலுக்கு இன்றையதினம் 14 கைவேலியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச் செயலகத்தில்  நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது தாயக உறவுகளும் போராளிகளும் இணைந்து தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கத்தினை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது