May 09

காரை தானே ஓட்டிய ராணி எலிசபெத்

பிரிட்டன் ராணி எலிசபெத், விண்ட்சர் பார்க் சர்ச்சிலிருந்து, தனது ஜாக்குவார் காரை தானே ஓட்டி அரண்மனைக்கு வந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இளவரசர் பிலி்ப், பொதுச்சேவையிலிருந்து விடுபடுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருந்தபோதிலும், ராணி எலிசபெத், அவர் தனது பணிகளை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சன்டே பிரார்த்தனைக்காக சர்ச்சிற்கு சென்ற ராணி எலிசபெத், டிரைவர் இல்லாத காரணத்தினால், காரை தானே ஓட்டிச்சென்றார்.
ராணி எலிசபெத், இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே கார் ஓட்டுவதற்கான பயிற்சியை பெற்றிருந்தார். அவர் அப்போதே, சான்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டிற்கு ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டிவந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
91 வயதான ராணி எலிசபெத், பிரிட்டனில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி பெற்ற ஒரே நபர் என்பது குறிப்பிடத்தக்கது.