May 09

ஐ.பி.எல்.திருவிழா; பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்

ஐ.பி.எல் தொடரின் 47ஆவது போட்டியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  குஜராத் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய  பஞ்சாப் அணியின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

கப்தில் (02)  ஷேன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ஷ் 43 பந்தில் 58 ஓட்டங்களையும் அம்லா 60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸ் உட்பட 104 ஓட்டங்களையும்  குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தனர். 

மெக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 20 ஓட்டங்களைக் குவிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களைக் குவித்தது. 

190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி துடப்பெடுத்தாடியது. டி.ஆர். ஸ்மித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கிஷான் 29ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டி.ஆர். ஸ்மித் 39 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்து மெக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 39ஒட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்திக் ஜோடி நிதானமாக ஓட்டங்களைச் சேர்த்தது.

குஜராத் அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் அணி சார்பில் தினேஷ் கார்திக் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும், ஜடேஜா 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.