Dec 14

யாழில் சாதாரண தர மாணவி தற்கொலை

யாழ் - ஆணைக்கோட்டை பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவி ஒருவர், பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கடந்த 12ம் திகதி பரீட்சைகள் ஆரம்பித்த நிலையில், தனது மகள் அதற்கு தயாராகாது இருப்பதை அறிந்த தாய் அரையினுள் சென்று பார்த்துள்ளார். 

அப்போது, குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, தாய் இட்ட கூச்சலை கேட்ட அயலவர்கள், சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, மாணவி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.