Dec 13

ரொறொன்ரோவில் அறிமுகமாகும் lyft சவாரி சேவை!

Lyft தனது விரிவாக்கத்தை கனடாவின் ரொறொன்ரோவில் ஆரம்பிக்கின்றது. இது யு.எஸ்-இற்கு வெளியே ஆரம்பிக்கும் முதலாவது விரிவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.எஸ்-இற்கு வெளியே தனது முதலாவது விரிவாக்கத்தை Lyft கனடாவின் ரொறன்ரோவில் ஆரம்பிக்கின்றது.  இன்றிலிருந்து ரொறன்ரோ மக்கள் Lyft பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனமானது  சர்வதேச ரீதியாகவும் தமது சேவையை விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ரொறன்ரோ டாக்சி சாரதிகள் Uber சேவை குறித்து ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஐந்து வருடங்களின் பின்னர் குறித்த Lyft ரொறன்ரோவில் அறிமுகப்படுத்தப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த Lyft சேவையானது கடந்த வருடம் ரொறன்ரோவில் சட்டபூர்வமாக செயற்படுவதற்காக தமது சேவையில் நகர சபை விதிகளை அறிமுகப்படுத்தியது.