Mar 07

ஐ.நா.வுக்கான கடிதத்தில் மூன்று எம்.பி.க்கள் கைச்சாத்திடவில்லை

அரசாங்கத்திற்கு   கால அவகாசம்  வழங்கக்கூடாது  எனக்கோரி  ஐ.நா.  மனித உரிமை  ஆணைக்குழுவிற்கு  அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில்   தாங்கள்   கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள்  கட்சியின் தலைமைப்பீடத்திற்கு   அறிவித்துள்ளதாக   அதன் பேச்சாளரும்,   பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்   தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான  ஜி. ஸ்ரீநேசன்சாந்தி சிறிஸ்கந்தராஜா, மற்றும்  கே. கோடீஸ்வரன் ஆகிய மூவருமே  ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிற்கான கடிதத்தில் கைச்சாத்திடவில்லை என்றும் இந்தக் கடிதத்தில் தாங்கள் கையொப்பம்  விட முடியாது என மறுத்ததாகவும் அப்படியிருந்தும்  கையொப்பதாரிகளாக தமது பெயர்கள் அக்கடிதத்தில்  இடம்பெற்றிருப்பதாகவும்   அறிவித்துள்ளனர் என்றும்  கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் எம்.பி.  விடுத்துள்ள அறிக்கையில்  சுட்டிக்காட்டியுள்ளார்.