May 09

கனேடியக் கடவுச்சீட்டுக்களில் மாற்றுப் பாலினத்தவர்கள் உள்ளடக்கப்படுவர்

கனேடியக் கடவுச்சீட்டுக்களில் மாற்றுப்பாலினத்தவர்கள்அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள்  உள்ளடக்கப்படுவார்கள் எனக் கனேடிய நீதி அமைச்சர் Jody Wilson-Raybould தெரிவித்துள்ளார். கனேடியக் கடவுச்சிட்டுகளில் பொதுவாகப் பால்நிலை குறித்த பகுதியில் ஆண்/பெண் என்ற இரண்டு நிலைகள் மட்டுமே தற்போது  காணப்படுகின்றன. எனினும் எதிர்வரும் காலங்களில் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளடக்கப் படத்தக்கதாக அந்த வகையீட்டில் மாற்றம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் போதுமான அங்கீகாரம் வழங்கும் நோக்கில் ஏற்கனவே கனேடியப் பிரதமரால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்பொது அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே காணப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.