May 09

மாற்றுவலுவுள்ள இளையோரின் வேலைவாய்ப்புக்களுக்காக உதவி வழங்கும் மத்திய அரசு

டொரொன்டொ பிரதேசத்தில் உள்ள 330  மாற்றுவலுவுள்ள இளையோருக்குத் தேவையான தொழிற்திறன்களையும் பயிற்சிகளையும் வழங்க கனேடிய மத்திய அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. Don Valley மேற்கு பாராளுமன்ற உறுப்பினர் Rob Oliphant இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

விழிப்புலனற்றோருக்கான கனேடிய தேசிய நிறுவகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இத்தகவலை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் Canadian Council on Rehabilitation and Work என்ற அமைப்பிற்கு $4.7 மில்லியன் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

மாற்றுவலுவுள்ள இளையோருக்குத் தேவையான தொழில் திறன்களையும் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம்  இளையோருக்கு வளமான ஒரு வாழ்வைக் கட்டியெழுப்பும் சாத்தியம் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் பற்றீசியா ஹஜ்டு தெரிவித்தார்.