May 09

மனிட்டோபா எல்லைக்குப் பிரதமர் நேரில் செல்ல வேண்டும்

மனிட்டோபா எல்லைப் பகுதிக்குப்  பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேரடியாகச் சென்று அகதிகள் குறித்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பழமைவாதக் கட்சியினர் கோரியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து அதிகளவான அகதிகள் கனேடிய-அமெரிக்க எல்லையைக் கடந்து மனிட்டோபாவிற்குள் பிரவேசிப்பதாகத் தெரிவித்த பழமைவாதக் கட்சியின் குடிவரவு விமர்சகர்  Michelle Rempel அவர்களே இக்கோரிக்கைய முன்வைத்துள்ளார். இவருடன் பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான  Ted Falk  அவர்களும் மனிட்டோபா சென்றிருந்தார்.

 தற்போதைய அரசாங்கம் அகதிகள் விடயத்தில் தளர்வான கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும், இது கனடாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக  அமையக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கனடாவிற்குள் மக்கள் சட்டரீதியாக வருவதையே தாங்கள் ஆதரிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.