Mar 07

தமிழக மீனவன் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு த.தே.கூ கண்டனம்

தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூட்டுக்கு கடுமையான கண்டனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்  வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியவர் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மன்னார் கடற்பரப்பிற்கும் தனுஷ்கோடி கடற்பரப்பிற்குமிடையில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மீனவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் கண்டிக்கத் தக்கதாகும்.

எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமானது. இருப்பினும் துப்பாக்கி பிரயோகம் செய்யாது அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது சாலப்பொhருத்தமானது.