May 09

லாலுவை விடுவிக்க முடியாது; உச்சநீதிமன்றம்

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் மீதான மாட்டு தீவன ஊழல் வழக்கில் அவரை  மீண்டும் விசாரிக்க  வேண்டும் எனவும் தண்டனை மற்றும் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 1990-97இல் லாலுபிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த போது மாட்டுத்தீவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.950 கோடி ஊழல் செய்ததாக லாலுபிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.