இரும்பு பெண்மணிக்கு தமிழ் நாட்டில் திருமணம்
மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா தனது நீண்ட கால காதலரான இங்கிலாந்தை சேர்ந்த டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். இவர்களது திருமணம் தமிழ்நாட்டில் ஜூலை கடைசி வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
போராளியான இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஆயுதப் படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
2000ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதியில் இருந்து 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் ஆண்டு வரை அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரோம் ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டு படும் தோல்வி அடைந்தார். அவர் 90 வாக்குகளே பெற்றார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் . தனது நீண்ட கால காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளார். திருமணத்துக்கு பிறகு அவர் தமிழ்நாட்டிலேயே குடியேற போவதாகவும் கூறப்படுகிறது.