May 09

ஐ.பி.எல் திருவிழா; மும்பை அபார வெற்றி

ஐ,பி.எல். தொடரின் 45ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் (25) களம் திரும்ப சிம்மன்ஸ் 43 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 66 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 

தொடர்ந்து பொல்லார்ட் 35 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ஓட்டங்களையும்  ஹர்திக் பாண்டியா 14 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ஓட்டங்களையும் பெற்று  கடைசி வரை ஆட்டமிழக்காதிருந்தனர். 

மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களைக் குவித்தது. 

பின் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணியின் ஆரம்ப வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து திணறியது. 

டெல்லி அணி சார்பில் கே.கே. நாயர் 21 ஓட்டங்களைக் குவித்தார், மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 66 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களையும், மலிங்க மற்றும் கே.வி. ஷர்மா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.