May 09

ஐ.பி.எல் திருவிழா; விளிம்பில் வெற்றி பெற்றது பஞ்சாப்

ஐ.பி.எல். தொடரின்; 43ஆவது போட்டி பெங்களுர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் மெக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் ஆரம்ப வீரர்கள் சொற்ப ஆட்டங்களில்  ஆட்டமிக்க  ஏ.ஆர். படேல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை விளாசினார்.

பஞ்சாப் 20ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 138 ஓட்டங்களை குவித்தது. 

பின்னர்139 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுர் அணியின் ஆரம்ப வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பெங்களுர் சார்பில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 46 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். 

19 ஓவர்கள் முடிவில் 119 ஓட்டங்களுக்கு பெங்களுர் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களுரை  வீழ்த்தி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் ஏ.ஆர். படேல் மூன்று விக்கெட்களையும், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களையும், எம்.எம். ஷர்மா மற்றும் ஜி.ஜெ. மாக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.