May 08

தமிழ் மக்களை இந்த அரசாங்கம் மூன்றாம் தர பிரஜையாக பார்க்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா அவர்கள் பாராளுமன்றில் உரையாற்றியபோது

கம்பனிகள் பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் பாராளுமன்றில் உரையாற்றும் போது சட்டங்களைஇயற்றுவது சட்டங்களை திருத்துவது அதனை செயற்படுத்துவது என்பன தொடர் நடவடிக்கையாகவேஇருந்து வருகின்றது ஆனாலும் ஆக்கப்படுகின்ற சட்டங்கள் அனைத்தும் அந்த மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் நன்மை தரக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்தபடுகின்றதா என்றும் நாம்நோக்குவோமாயின் இந்த வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர்க்கான ஓர் அலுவலகம் அமைத்தல்என்னும் சட்டம் உருவாக்கப்பட்டது ஆனால் இன்று வரை அது செயற்படுத்தப்படாது எதுவித எடுத்துகூறக்கூடிய வகையில் அவர்களது அபிலாசைகளை அவர்கள் கேட்கின்ற முறையிலே அந்தசட்டங்களை அமுல்படுத்தக்கூடிய வகையில் அது செயற்படுத்தப்படாது இருப்பது மிகவும்வேதனைக்குரிய விடயமாகும். 

இதனை விட இந்த சட்டங்கள் ஆக்குதல் சுற்று நிருபங்கள்உருவாக்குதல்தேசிய கொள்கைகளை உருவாக்குதல் என்ற பல்வேறுவிதமான நடவடிக்கைகளின் கீழ்எடுக்கப்படுகின்ற அந்த செயற்பாடுகள் இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாகஎடுக்கப்படுகின்றதா என்று ஒரு கேள்வியும் நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். ஏனென்றால்இந்த காணிகளை அபகரித்தல் என்பது இப்போது வடக்கு கிழக்கு பகுதியிலே மிகவும் துரிதகதியிலேநடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 


அந்த வகையிலே வனவளப்பாதுகாப்புஇ வனஜீவராசிகள் பாதுகாப்புதொல்பொருளியல் பாதுகாப்பு என்ற வகையில் பல்வேறு காணிகள் மிகவும் விரைந்து விரைந்துஎல்லையிடப்படுகின்றது. இந்த காணிகளுக்குள் எமது மக்கள் பூர்விகமாக வாழ்ந்த காணிகள்அடக்குவது நிலைபேறான வருமானம் தரக்கூடிய மரங்கள் உள்ளடக்கிய காணிகளை உள்ளடக்குவதுபோன்ற பல்வேறு விதமான ஏற்பாடுகளில் மூலம் காணிகளை வலிந்து பிடித்து கொள்ள முடியும்என்பது எந்த சட்டத்தின்கீழ் உள்வாங்கப்படுகின்றது அல்லது எந்த தேசிய கொள்கைக்குள்உள்வாங்கப்படுகின்றது என்ற ஒரு கேள்வியையும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இறுதி யுத்த இடம்பெயர்வின்போது பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த மக்களுடைய காணிகள்சுவீகரிக்கப்படுவது அந்த காணிகளில் இராணு முகாம்இ கடல்படை முகாம் போன்றவற்றை அமைத்துஅந்த காணிக்குரிய ஆவணங்களை எமது மக்கள் வைத்திருந்தபோதும் எட்டு வருடங்கள்முடிவடைகின்ற நிலையிலும் அந்த காணிகளை முழுமையாக விடுவிப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்படவில்லை தமது அந்த காணிகளை விடுவிக்குமாறு எமது மக்கள் வீதியோரத்தில் தமதுகாணிகளுக்கு முன்பாக கொட்டும் வெய்யிலிலும் பலவிதமான அசௌகரியங்களையும் எதிர்கொண்டுபிள்ளைகளோடும் குடும்பமாகவும் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தெரிவிக்கின்றனர் இதற்குஇந்த அரசானது கண்டும் காணாமல் இருப்பது எந்த சட்டத்தின்கீழ் அல்லது எந்த கொள்கையின்கீழ்உள்வாங்கப்பட்டிருக்கின்றது.

எமது மக்கள் தங்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களிலே தம்மை குடியேற்றுமாறு கேட்கின்றார்கள்ஆனால் அரசானது குப்பைமேடு சரிந்தவுடன் மிகவும் விரைந்து அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகலவிதமான உதவிகளையும் பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி அதற்கென சிறப்பு பாராளுமன்றஅமர்வையும் நடத்தியது. பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நானும் அனுதாபத்தைதெரிவித்துக்கொள்வதோடு அவர்களது துன்பத்திலும் பங்கு பெற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இந்தநாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளையும் ஒரே தரத்தில் வைத்து இந்த அரசு கவனிக்க வேண்டும் ஓர்மூன்றாம் தர பிரஜையாக தமிழர்களை என் எதிர்நோக்குகின்றிர்கள் என்பது தான் இங்குவேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது எமது மக்களுக்கு ஒரு இயல்பான நிலையை ஒரு சாதாரணசூழலில் வாழக்கூடிய நிலையை உருவாக்கி தாருங்கள் என்றுதான் நாம் உங்களிடம் கேட்கின்றோம்.

வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்திலும் பல்வேறு விதமான முரண்பாடுகள் காணப்படுவது மிகவும்வேதனைக்குரிய விடயமாகும் இந்த யுத்த காலத்திலேயே பல இன்னல்களை அனுபவித்து கல்வியைமேற்கொண்டு கல்வி தரமுள்ளவர்களாக இருப்பவர்களாக உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புவழங்கப்படாமல் அவர்கள் வேலைகளை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போதுதென்பகுதியிலே இருந்து வடபகுதியிலே உள்ள அரச வெற்றிடங்களை நிரப்புவதற்காக இங்கிருந்துஉத்தியோகத்தர்கள் அனுப்பப்படுகின்ற நிலையானது எமது மக்களை மேலும் பாதிப்படையசெய்கின்றது அதுமட்டுமல்ல இந்த பட்டதாரிகளை தொடந்தும் வேலை தேடுகின்ற போராட்டத்திற்காகபோராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே வேலை செய்த அனுபவமுள்ள பலர் வாழ்கின்ற இந்தசூழலிலே யுத்த நேரத்தில் மூடப்பட்ட கைத்தொழில்சாலைகளும் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதுவேலை வாய்ப்பு இல்லாமல் எமது நாடு தொடந்தும் ஏழ்மை நாடாக இருப்பதற்கும் காரணியாகஅமைகின்றது.

கைத்தொழில் சாலைகளை அமைத்து உற்பத்தி செய்கின்ற மூலப் பொருட்களைமுடிவுப்பொருளாக மாற்றுவது முயற்சியாளர்களை ஊக்குவிப்பது மூடப்பட்ட கைத்தொழில்சாலைகளை திறப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாமை போன்றவையும் தென்பகுமீனவர்கள் எல்லை தாண்டி கொக்கிளாயில் மீன் பிடியை மேற்கொள்வதும் ஒரு வேதனைக்குரிய ஓர்விடயமாகும்


மக்களுடைய போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை தென்பகுதியில் இருந்து வரும்அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து பார்த்து செல்கின்றார்களே தவிர பாராளுமன்றத்தில்கதைப்பது இல்லை உங்களுடைய சட்டங்களும் கொள்கைகளும் உங்களுடைய விவாதங்களும்தனிப்பட்ட முறையிலே உங்களுக்குள்ளேயே இருக்கின்ற குரோதங்களையும் நீக்கி கொள்கின்றவகையிலும் தனிப்பட்ட வகையிலே கட்சிக்குள் நீங்கள் செல்வாக்கு செலுத்தக்கூடிய வகையில்தான்உங்கள் நடவடிக்கைகள் எடுக்கின்றீர்களே தவிர இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்கொடுக்கக்கூடிய வகையில் அவர்களுக்கும் விமோசனம் கொடுக்கக்கூடிய வகையில் அவர்களும் இந்தநாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பேதங்கள் அற்ற முறையில் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றீர்கள்

எமது தமிழ் பாரம்பரியத்திலே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது கதை மட்டுமின்றிஅதற்கான ஆதாரங்களும் இருக்கின்றது இவ்வாறாக இந்த அரசு தொடந்தும் இழுத்தடிப்புக்களைசெய்கின்றபோது அது ஒரு பாரிய விளைவை ஏற்படுத்தும்.

ஒருஏழைத்தாயின்கண்ணீரின்பெறுமதிஅதுவிலைமதிக்கமுடியாததுஅதற்குபதில்கூறியாகவேவேண்டும்நீங்கள்சட்டமகொள்கைசுற்றுநிருபங்கள் ஆக்கும் போது முழு மக்களுக்கும் பயனுள்ளதாக இயற்றும்போது மிகவும் பயனுடையதாகும்.