May 08

மக்ரோங் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூரோவின் பெறுமதி அதிகரிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவேல் மக்ரோங் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிரான யூரோவின் பெறுமதி இன்று (திங்கட்கிழமை) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூரோவுக்கான அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று காலை 1.1024 ஆக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ஏற்பட்ட யூரோ பெறுமதி அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் குறித்த அதிகரிப்பே அதிகூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் 39 வயதான இமானுவேல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன், பிரான்ஸின் அரசியல் வரலாற்றில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இளம் ஜனாதிபதி எனும் பெருமையையும் தக்கவைத்துக் கொண்டார்.