May 08

கட்டப்பா சத்யராஜ்க்கு நான் தான் ஜோடி: குஷ்பு

சத்யராஜ்க்கு நான் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
ராஜமௌலியின் முதல் பாகமான பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதற்கான விளக்கம் தற்போது சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பாகுபலி2 படத்தில் விடை கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் இப்படத்திற்கு இருந்த பிரச்சனைக்கு சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால் தீர்ந்தது. இதனால், பாகுபலியை கட்டப்பா சத்யராஜ் தன் மானத்தை கொடுத்து காப்பாற்றியதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

ஆனால், சத்யராஜ் போன்று வேறு யாராலும் கட்டப்பாவாக நடித்திருந்தால் பாகுபலிக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று.

இப்போது நான் ஒரு ரகசியத்தை சொல்லப்போறேன். சத்யராஜ்க்கு ஜோடியாக நான் தான் அதிக படங்களில் நடித்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.