May 08

தீய நோக்கத்திற்காகவே திணிக்கப்பட்ட நீட், தொடக்கத்திலேயே தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டது!

நிலைமையை உணர்ந்து இனியாவதுநீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!


தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை மீறி மருத்துவக் கல்வி பொது நுழைவுத் தேர்வு(நீட்) நேற்று நடந்து முடிந்தது.


இந்தியாமுழுவதும் 11 லட்சத்து 35ஆயிரத்து 104 பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், 103 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,204 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதினர்.


தமிழகத்தில்சென்னைமதுரைதிருச்சி,கோயம்புத்தூர்சேலம்நாமக்கல்,திருநெல்வேலிவேலூர் ஆகிய 8நகரங்களில் உள்ளமையங்களில் 88ஆயிரத்து 478 மாணவர்கள் எழுதினர்.


தேர்வில் விதிக்கப்பட்டிருந்த மிக மோசமான கட்டுப்பாடுகளின் விளைவாக மாணவர்கள் பெருத்த அவமானத்தை சந்திக்க நேர்ந்தது.


காலை 7 மணிக்கே தேர்வு மையத்திற்குள் வந்துவிட வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இது தொலைதூரத்திலிருந்து வரும் மாணவர்களை இடியாய்த் தாக்கியது. அந்த நேரத்திற்குள் வர முடியாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. கண்ணீருடன் திரும்பிச் சென்றனர்.


மற்ற நிபந்தனைகளும் அதீத கெடுபிடிகளாகமாறின. வாட்ச்,பிரேஸ்லெட்மோதிரம்காதுவளையம்,மூக்குத்திசெயின்நெக்லஸ்ஜிமிக்கி அணிந்து வரக்கூடாது;


 பெரிய பொத்தான்,பேட்ஜ்பெரிய அளவிலான ரப்பர் பேண்டுகள்தலை கிளிப்புகள்பூ ஆகியவற்றை அணியக் கூடாது.


புடவை கட்டிவரக்கூடாது; ஷூசாக்ஸ், முழுக்கை சட்டைடிசர்ட்பெல்ட்கைக்கடிகாரம்,குளிர்கண்ணாடி அணியக்கூடாது போன்ற நிபந்தனைகள் மாணவ, மாணவியருக்கு மானபங்கத்தையே ஏற்படுத்தக் காரணமாயின.


முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் சட்டைக் கையைக் கத்தரித்து அரைக்கை சட்டையாக மாற்றி அணிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.


மாணவிகள் தாங்கள் போட்டிருந்த ஆபரணங்களைக் கழற்றிவிட்டு, ஊரில் சொல்வார்களே மூளி என்று, அந்த பரிதாப நிலையில் தேர்வறைக்குள் சென்றனர்.


இதில் வருந்தத்தக்க விடயம், அப்படி கழற்றிய நகைகள், செல்போன்கள் போன்றவற்றை யாரிடம் கொடுத்து வைப்பது என்பதறியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டது என்பதுதான்.


எல்லாவற்றையும்விட மானக்கேடான விடயம் கேரள மாநிலம் கண்ணூரில் நடந்திருக்கிறது. ஒரு மாணவியின் உள்ளாடையைக் களையச் சொல்லி வலுக்கட்டாயம் செய்த வெட்கக்கேடான சம்பவம் அது.


இந்த அத்துமீறல்கள் அனைத்தையும் மனித உரிமை மீறல்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இதற்கு பொறுப்பேற்க வேண்டும்பதில் சொல்லியாக வேண்டும் மத்திய அரசு.


சரி, இந்த தேர்வாவது முறையாக நடைபெற்றதா என்றால் அதுவும் இல்லை. மத்திய அரசின் இதர துறைகளில் நடந்துவரும் வழக்கமான முறைகேடுகள், குளறுபடிகளுடனேயே இந்த நீட் தேர்வும் நடந்தது.


பிகாரிலும் ராஜஸ்தானிலும்முன்கூட்டியே கேள்வித்தாளைக் கசியவிட்டு ஐந்து லட்சங்களுக்குக்குறையாமல்ஒவ்வொருவரிடமும் வசூலித்ததாக பிடிபட்டு வழக்கும் போட்டிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இந்த தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரித்த சிபிஎஸ்இ அமைப்பைச் சேர்ந்த நபரே இந்த காரியத்தைச்செய்துபணம்பார்த்ததாகவும்செய்திகள்தெரிவிக்கின்றன.


தீயநோக்கத்திற்காகவேதிணிக்கப்பட்டிருக்கும் இந்த நீட் தேர்வு இப்படி தொடக்கத்திலேயே தன் சுயரூபத்தைக் காட்டி, கோரத் தாண்டவமே ஆடித் தீர்த்திருக்கிறது.


தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த வேண்டாத,விரும்பத்தகாதஅவமரியாதை நிகழக் காரணமே ஆட்சியாளர்களின் செயல்பாடின்மைதான் என்றே குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சட்டமன்றத்தில்ஒருமனதாகநிறைவேறிய நீட்விலக்கு மசோதாவுக்குஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். அந்த மசோதாவை ஜனாதிபதியின் பார்வைக்கே அனுப்பாமல் முடக்கிவிட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆவன செய்ய வைத்திருக்க வேண்டும். அதைச்செய்யாமல்விட்டஆட்சியாளர்களுக்குதமிழகவாழ்வுரிமைக் கட்சி தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.


அதேநேரம், சமூக நீதி தொடர்பான இந்த நீட் விடயத்தில் இனிமேலாவது முழுமூச்சுடன் இறங்கி நீட் விலக்குமசோதாவுக்கு ஒப்புதலைப் பெற தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தன் வேண்டுகோளையும் வைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.