Dec 07

நாயை காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த தீயணைப்பு படை வீரர்..

கனடா நாட்டின் சஸ்கெட்ச்வான் பகுதியில் நாய் ஒன்று பனியில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வீரர் ஒருவர் தனது காலில் கயிறு ஒன்றை கட்டி பனியின் மீது மெதுவாக சென்றார்.

பனியின் நடுவில் சிக்கியிருந்த நாயை வெளியே எடுத்த போது பனியானது உடைந்து விழுந்தது.

அதிலிருந்து வீரர் தப்பித்து நாயை காப்பாற்றிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உறைய வைக்கும் பனியில் நாயை காப்பாற்ற வீரர்கள் மேற்கொண்ட பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அனைவரும் தங்கள் செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.