Dec 07

உள்ளூராட்சித் தேர்தல் - 2018 தமிழரசுக் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்

இன்று(07.12.2017) வெளிவந்துள்ள செய்தித்தாள்களிலும் ஏனைய ஊடகங்களிலும் குறிப்பாகரெலோ” இயக்கத்தின் செயலாளர் நாயகம் வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில்நேர்முகமாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை மீது நான் கேள்வி எழுப்புகின்றேன்.

திரு. சிறீகாந்தா வழக்கறிஞர். மூத்த தமிழ்த் தலைவர்களில் ஒருவர். இனப்பிரச்சனைத் தீர்வுபற்றியோ ஏனைய எழுகின்ற பிரச்சனைகள் பற்றியோ தீர்வுகள் எட்டும் வகையில்ஆலோசனைகள் முன்வைப்பவர். அறிவு ஆற்றல்ரூ  நிதானம் கொண்டவர். அவர் கருத்தில்ரூ “எழுந்துள்ள பிரச்சனைகளுக்குத் தமிழரசுக்கட்சி தான் பொறுப்பு என்று குற்றம்”சுமத்தியுள்ளார். எழுந்திருக்கின்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாம்பொறுப்பேற்கின்றோம்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர் பகிர்விலும்ரூ உள்ளூராட்சி மன்றங்களைக்கட்;சிகளுக்கு ஒதுக்கீடு செய்வதிலும் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் தொடர்ச்சியானபேச்சுக்களைத் தொடர்ந்து 05.12.2017 அன்று மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின்அலுவலகத்தில் தமிழரசுக் கட்சிரூபவ் தமிழ்  விடுதலை இயக்கம்ரூ  தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் ஆகியகட்சிகளின் தலைவர்கள்ரூபவ் செயலாளர்கள்ரூ  பாராளுமன்ற உறுப்பினர்கள்ரூ  மாகாணசபைஉறுப்பினர்கள் மற்றும் அக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஆரம்பத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்னவெனில்:

1.உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் நியமனத்தில் ஒவ்வொரு கட்சியின் தரப்பிலும்அடையாளப்படுத்தி கட்சித்தலைவர்களினால் எட்டப்படும் தீர்மானத்தை முன்கூட்டியே அறிவிக்கத்தேவையில்லை. தீர்மானித்தவாறே அவர்களை தேர்தல் முடிந்ததும் நியமிப்போம். இக் கருத்துஏற்றுக் கொள்ளப்பட்டது.

2.இத் தேர்தலில் வட்டார முறையும்ரூபவ் விகிதாசார முறையும் வேட்பாளர் தேர்வுக்கு அடிப்படையாகஇருக்கும். அந்தந்த வட்டாரங்கள் ஒவ்வொன்றிலும் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை மூன்றுகட்சிப் பிரதிநிதிகளும் அவ்வவ் கட்சிகளின் ஒதுக்கீடு பாதிக்காமல் கவனத்தில் எடுத்து வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களை இணக்கங் கண்டு தெரிவது நல்லது.

3.தேர்தல் ஆணையத்தின் அறிவித்தலின் படி 11.12.17 – 14.12.2017க் கிடையில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்குரிய உள்ளூராட்சி மன்றங்களை முதலாவதாக எடுத்துத் தீர்வு காண வேண்டும்என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் 18.12 – 21.12.2017க்குஇடையில் நியமன வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்வதென்பதால் இணக்கம் காண்பதை அவசரப்படாமல்ஆறுதலாகத் தீர்மானத்தை எடுக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால் அனைத்து உள்ளூராட்சிமன்றங்கள் வேட்பாளர் தொடர்பாகவும் பேசப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வருகைதந்தபிரதிநிதிகள் ஆரோக்கியமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். பின் என்னால்கூறப்பட்டது என்னவெனில் இணக்கம் காணாமல் இருக்கும் குறிப்பாக மட்டக்களப்பு உட்பட சபைகள்தொடர்பில் அடுத்த நாள் 06.12.2017 காலையில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கலந்துபேசி இறுதி முடிவை எடுப்பது என்பது தான். அதிலும் இணக்கமிருந்தது

4.மூன்று கட்சித்தலைவர்களிடத்திலும்ரூபவ் சந்தித்த பிரதிநிதிகளிடத்திலும் ஒவ்வொரு தடவையிலும்முக்கியமாக நான் குறிப்பிட்டது என்னவெனில் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த உள்ளூராட்சிமன்றப் பிரதேசங்களில்ரூபவ் வட்டாரங்களில் செல்வாக்கும்ரூபவ் வெற்றி வாய்ப்பு அடிப்படைகளையும்கொண்டிருக்கிறார்களோ அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களை நியமிப்பது வெற்றிக்குவழியாக முடியும் என்றும்ரூபவ் ஏதும் விஷட தேவைகளிருப்பின் அதனைக் கவனத்தில் எடுத்துத்தீர்மானம் எடுப்பது நல்லது என்றும் என்னால் கருத்து முன்வைக்கப்பட்டது.

பெண் வேட்பாளர்கள்ரூபவ் இளைஞர்கள்ரூ போராளிகள்ரூ மலையகத்தவர்ரூ  வளர்முக சமூகத்தினர்என்போரை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

வளர்முக சமூக மக்கள் 40மூ க்கு மேலும் யாழ்.மாவட்டத்தில் மட்டுமுள்ளனர். முன்னைய கரவெட்டித்தொகுதியில் திரு. இராசலிங்கம்ரூ  பா.உ ஆக பெருவெற்றி பெற்றார். தலைவர் திரு.சிவசிதம்பரம் அதற்காக நல்லூர் தொகுதிக்கு மாற்றப்பட்டு வெற்றி பெற்றார். திரு.ஜெயக்கொடி போட்டியிடாமல் விட்டார். அந் நடைமுறையில் வடமராட்சி தெற்கு மேற்குப்பிரதேச சபையிலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் தேவையுள்ளது.

இத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வெற்றி பெறக் கூடிய பிரதேசங்களை விட்டுக் கொடுத்த போதுபுளொட் இயக்கமும்ரூபவ் ரெலோ இயக்கமும் அச்சபைகளே வேண்டுமென விடாப்பிடியாக இருந்தநிலையுமிருந்தது. இந்த அடிப்படை விடயங்களை விடுத்து தமிழரசுக் கட்சி திட்டவட்டமாக வெற்றிபெறக்கூடிய பிரதேசங்களை இக் கட்சியினர் தரும்படி கோரியிருந்த போதும் அவற்றையேவிட்டுக் கொடுத்து ஒற்றுமையை ஏற்படுத்தத் தலைவர்கள் மட்டத்தில் 06.12.2017 காலை கூடித்தீர்;மானமெடுக்கத் எண்ணிய பொழுதும் “ரெலோ” இயக்கத்தினர் வவுனியாவில் இரவில் கூடித்“தமிழரசுக் கட்சியுடன் தேர்தலில் ஒன்றுபட நிற்க முடியாது” எனக் கூறியுள்ளனர்.

அச்செய்தியை அவசரமாக ஊடகங்களிலும் பரப்பியிருந்தனர். இத் தீர்மானத்தால் நாம் மிகுந்தகவலையடைகின்றோம்.

தமிழரசுக் கட்சித் தலைவர்களைத் தோற்கடிக்க வேண்டுமெனும் கட்சிகள்ரூபவ் இப்பொழுது தமிழரசுக்கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென பிரகடனஞ் செய்;கின்றனர். தமிழரசுக் கட்சியுடன் பேசிமுடிவெடுப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தபொழுதும் அதைவிடுத்து முன்னரே அத்தகைய கட்சிகளுடன்ரெலோ அணியினர் இணைய முயற்சித்து பேசுவது பொருத்தமற்றதும் தவறான பின்விளைவுகளைஏற்படுத்தக் கூடியதாகும். அது தான் குழப்பநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தேர்தலில்தமிழரசுக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள சபைகளையே மேலும் குறிவைத்து தத்தமது கட்சிகளுக்குஒதுக்கித் தரவேண்டுமென நெருக்குதல் கொடுப்பதுமே மேலுங் குழப்பத்தின் காரணமாகின்றது.

இது துரதிஷ;டவசமான முடிவாக இருந்தாலும் இனத்தின் ஒற்றுமை கருதி மேலும் விட்டுக்கொடுப்புக்களைச்செய்து உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றுபட்டு வெற்றிபெற நாம் முயற்சிகளைஎடுத்துள்ளோம். அதே வேளை தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் மக்களிடத்திலும் இந்நிலமைதொடர்பில் விளக்கமளித்தும் வருகின்றோம். இத்தவறுதலான அணுகல் முறைகளை விடுத்து தமிழரசுக்கட்சியுடன் இணைத்து வெற்றிபெறுமாறு அழைக்கின்றோம்.

மாவை.சோ.சேனாதிராசா

இலங்கைத் தமிழரசுக் கட்சி