Dec 07

ஓட்டமாவடியில் உணவு கையாளுதல் தொடர்பாக விழிப்புணர்வு

பாதுகாப்பான முறையில் உணவுகளை கையாளுதல் எனும் தொனிப் பொருளில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு அதிகாரி அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் வளவாளர்களாக மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களான ரி.வரதராஜன், என்.விமலசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார். 

இக்கருத்தரங்கில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.கே.ஜௌபர், ஏ.எம்.எம்.சுனீல் மற்றும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

இதன்போது பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு பாதுகாப்பான முறையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கமைய உணவு பாதுகாப்பு சம்பந்தமான தெளிவூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.