Dec 07

ஜெயலலிதா மரணம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் டாக்டர் பாலாஜி

சென்னை கலசமஹாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் மருத்துவர் பாலாஜி, அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜனும் விசாரணைக்காக ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மற்றும்  டாக்டர்  தர்மராஜ் ஆஜரானார்கள். 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மருத்துவர் பாலாஜி. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது குறித்து மருத்துவர்களின் விளக்கம்  மற்றும்  ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை, உணவு மற்றும் சந்திப்பு ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக 6 அரசு மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது.