Dec 07

புதிய இராணுவ தொண்டர் படையணித் தளபதி நியமனம்

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணித் தளபதியாக மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன பதவியேற்றுள்ளார்.

கொஸ்கமவிலுள்ள தொண்டர் படையணித் தலைமையகத்தில் நேற்று புதிய தொண்டர்ப் படைத் தளபதியை இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்றகப்பட்டதை தொடர்ந்து பிரித் சமய வழிபாடுகளும் இடம்பெற்றது.

 

புதிய தொண்டர் படைத் தளபதியவர்களால் படைத் தலைமையக வளாகத்தில் மரநடுகையும் இதன்போது நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தமது கடமைப் பொறுப்பை கையொப்பமிட்டு ஏற்றதுடன் படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினருடனான கலந்துரையாடலையும் புதிய தொண்டர் படைத் தளபதி மேற்கொண்டார்.

 

மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியில் 35ஆவது தொண்டர் படைத் தளபதியாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இநத் நிகழ்வில் திருமதி ருவினி சுஜிவா விக்கிரமரத்தினவும் கலந்து கொண்டார்.