Dec 07

பாடகர் Johnny Hallyday இழப்பை அறிவிக்க அழைக்கப்பட்ட மக்ரோன்!

பாடகர் Johnny Hallyday நேற்று புதன்கிழமை காலை 2 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்த இறப்பை அறிவிப்பதற்காக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு இரவு 2 மணிக்கு அவரின் மனைவி அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மானுவல் மக்ரோனுக்கு இரவு 2 மணிக்கு அழைத்த Johnny Hallyday இன் மனைவி Laeticia Hallyday, கணவர் இறந்த செய்தியை தெரிவித்ததாகவும், பின்னர் அவரையே இந்த இறப்பை அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மானுவல் மக்ரோன் அதன் பின்னர் தற்போதுவரை உறங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, தற்போது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் மக்ரோன் மற்றும் பிரிஜித் மக்ரோன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இம்மானுவல் மக்ரோன் தனது டுவிட்டர் சமூகவலைத்தளம் ஊடாக Johnny Hallyday க்கு அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.