May 08

மட்டக்களப்பு செங்கலடியில் முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாயான முன்னாள் போராளி யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் செங்கலடி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை செங்கலடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.