May 08

பிரான்ஸ் புதிய அதிபர் மக்ரோனுக்கு மோடி வாழ்த்து

பிரான்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோனிற்கு, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, தங்களது இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம், நமது இருநாடுகளுக்கிடையேயான நட்பு வலுப்பெறும் என்றும், சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட வழிவகை ஏற்பட்டுள்ளதாக அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.