Dec 06

வலைதளங்களால் மறதி நோய் ஏற்படும் அபாயம் !

வலைதளங்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான  விவரங்களைப் பெறும் வழக்கத்தால்  மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என  பிரிட்டனைச்  சேர்ந்த  ஆய்வாளர்  ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


வலைதளங்களால்   மறதி    நோய்    ஏற்படும்    அபாயம்  !


பிரிட்டன் நாட்டின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிராங்க் கன்மூரே தெரிவிக்கையில்,

 எமது மூளையின் ஆரோக்கியத்தைப் பரமாரிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.


மூளைக்கு வேலை கொடுத்தால்தான் அது ஆரோக்கியத்துடன் இயங்கும்.


ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் நாம் நமது மூளையின் வேலைகளை இணையதளத்தைக் கொண்டே செய்துவிடுகிறோம்.


நமக்கு மறந்துபோன ஏதாவது ஒரு தகவலை மீண்டும் பெற வேண்டுமென்றால், அதை மீண்டும் நினைவாற்றலிருந்து தேடிப் பார்ப்பதற்குப் பதிலாக இணையதளத்தில்  தேடி, எளிதில் பெற்று விடுகிறோம்.


அந்த வகையில், மனிதர்கள் தற்போது தங்களது மூளைகளை மிகப் பெரிய பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.


இணையதளத் தேடல்கள் காரணமாக மறதி நோய் உண்டாகும் அபாயம் அதிகரித்திருப்பது, இந்தப் பரிசோதனையின் முடிவில் தெரிய வரலாம்  என்று அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.