சஷி வெல்கமவுக்கு பிணை
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இலங்கை போக்கு வரத்து சபையின்
125,830,733.66 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாயவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றினால் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மேல் நீதிமன்றில் தககல் செய்யப்பட்ட பிணை மனுவை ஆய்வு செய்து மேல் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியது.
2 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யந்துடுவ வெளிநாட்டு பயணத்தையும் தடை செய்தார்.