Dec 05

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென மன்றைகோரியதற்கு இணங்க மேற்கண்டவாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.