May 08

சாவகச்சேரியில் மூவர் மீது வாள்வெட்டு

 யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவகமொன்றில் ஆறு பேர் கொண்ட குழுவால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


இவ்வாறு படுகாயமடைந்த மூவரில் ஒருவரது ஆபத்தான நிலமையை கருத்தில் கொண்டு அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

தாக்குதல் சம்பமானது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனகம்புளியடியில் உள்ள உணவகமொன்றிலே நேற்று மாலை 3.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.  

 

 நேற்று மாலை குறித்த உணவகத்தில் மூவர் உணவு அருந்திக் கொண்டிருந்த நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில்  ஆறுபேர் சென்றுள்ளனர். இவர்களில் நால்வர் உணவகத்துக்குள் நூழைந்து அங்கிருந்த  மூவர் மீதும் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலை நடாத்தியவர்கள் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதன்பின்னரே அங்கு வந்த பொதுமக்கள்  தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மூவரையும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.     தாக்குதல் சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்த குறித்த உணவக உரிமையாளரான சிவபாலன் சிவலக்ஸ்மன் (வயது 32), மூச்சக்கரவண்டி சாரதியான நாகசாமி நந்தன் (வயது 24) மற்றும் வேணுகோபால் சுகந்தன் (வயது 22) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.

 

 தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூவரில் ஒருவரான வேணுகோபால் சுகந்தன் என்பவருக்கு வயிற்று பகுதி மற்றும் கைகளில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களால் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குறித்த நபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் எனைய காயமடைந்த இருவருக்கும் சாகவச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு ருகின்றது.   குறித்த தாக்குதல் சம்பவமானது யாரால் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து சாவகச்சேரி பொலிஸார் விரிவான விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 


இதேவேளை   தாக்குதல் சம்பவத்தில் தாக்குதலுள்ளாகி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நபர் கடந்த இரண்டு தினங்களிற்கு முன்பே வெளிநாடொன்றில் இருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.