Mar 06

விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

40 அரச வாகனங்களை மோசடியாக பயன்படுத்தி, நம்பிக்கை துரோகம் செய்து மோசடி புரிந்தமை, மோசடிக்கு உதவி ஒத்தாசை அளித்தமை ஆகிய குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் பொது வசதிகள் தொடர்பிலான அமைச்சர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

 

விமல் வீரவன்சவை  எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.