Mar 06

பாதாள கோஷ்டிகளிடம் புலிகளின் ஆயுதங்கள்

புலிகளின்  பாவனையில் இருந்த ஆயுதங்களே இன்று பாதாள கோஷ்டிகளிடம் உள்ள அமைச்சர்    சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொட்ட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் மோசடிக்கார குழுக்களும் ஆயுதக் குழுக்களும் அதிகளவில் உருவாக்கம் பெற்றுள்ளன. நாட்டில் சகல பகுதிகளிலும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள. இன்று நடைபெறும் சில சம்பவங்களை பார்க்கும்போது வியப்பாக உள்ளது.

முன்னைய காலங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் மாத்திரம் உருவாக்கிய பாதாள கொள்ளை குழுக்கள் இப்போது ஆயுதக் குழுக்களாக உருவாக்கம் பெற்றுள்ள.

நாடு பூராகவும் ஆயுத கோஷ்டிகள் பரவியுள்ளன. பொது இடங்களில் ஆயுதங்களை ஏந்திவந்து மக்களை கொல்லும் நிலைமை இன்று உருவாகியுள்ளது.

ஆனால் இவர்களுக்கு துப்பாக்கிகள் எவ்வாறு கிடைக்கின்றஎன்ற சந்தேகம் உள்ளது.  ஆரம்பத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சி காணப்பட்டது. அப்போது ஆயுதங்களுடன் அவர்கள் போராடி மக்களை வீதிகளில் கொன்று போட்டனர்.

பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் காணப்பட்டது. இவற்றை முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் புலிகளின் ஆயுதங்களை இவ்வாறு ஆயுதக் குழுக்களுக்கு விற்றிருக்க வேண்டும்.

ஏனெனில் இன்று பாவனையில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆயுதங்களும் புலிகளின் ஆயுதங்கள். அது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இவை கண்டறியப்பட வேண்டும் என்றார்.