May 06

பூனைகளுக்காகக் குரல் கொடுக்கும் மனிதர்

ஜப்பானின் கியுஷு நகரில் வசிக்கும் 55 வயது மசாஹிகோ சுகா சாலையில் சென்றால் அவரை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்காத வர்களே இல்லை. எப்பொழுதும் தள்ளுவண்டியில் 9 பூனைகளை வைத்துக்கொண்டு நடந்துகொண் டிருப்பார். 

ஜப்பானியர்கள் பூனை களை விரும்பி வளர்ப்பார்கள். ஆனால் அவற்றை வெளியில் அழைத்துச் செல்வதில்லை. அதனாலேயே மசாஹிகோவை எல்லோரும் வியப்பாகப் பார்க் கிறார்கள். பூனை மனிதர் என்றே அழைக்கிறார்கள். 

“1999-ம் ஆண்டு ஒரு பூனையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தேன். நாய்க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்கள் பூனைக்குக் கொடுப்பதில்லை என்பதைக் கவனித்தேன். நாய்களைப் போலவே மனிதர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் பூனைகளும் ஏங்குகின்றன. 

உலகம் முழுவதும் நாய்களைத் தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். யாருமே பூனைகளை அப்படி விரும்பி அழைத்துச் செல்வதில்லை. நான் பூனைகளை வெளியில் அழைத்துச் செல்ல முடிவெடுத்து ஒரு தள்ளுவண்டி வாங்கினேன். 

அதில் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகின்றன பூனைகள். குழந்தைகள் அவற்றுடன் கொஞ்சி விளையாடுகின்றனர். இதனால் பூனைகளும் மகிழ்ச்சி யடைகின்றன. குழந்தைகளும் மகிழ்ச்சியடைகின்றனர். 

நான் சந்திக்கும் மனிதர்களிடமெல்லாம் நாய்களைப் போல பூனைகளுக்கும் மதிப்பு கொடுங்கள், வெளியில் அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்கிறார் மசாஹிகோ.