Mar 06

குதிரை பாய்ந்து ஓடிய பின்பு தடையிடுவதில் அரத்தமில்லை

மட்டக்களப்பு பாசிக்குடா கும்புறு மூலை பகுதியில் அர்ஜுன எலோசியஸூக்கு சொந்தமான சாராய உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படுகின்றது  என பாராளுமன்ற உறுப்பிர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதற்கு இயந்திரம் கொள்வனவு செய்யும் போர்வையில் மத்திய வங்கியில் மோசடி செய்யப்பட்ட கறுப்பு பணம் சுத்திகரிப்பு செய்பபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

மேலும் கூறுகையில்,

இங்கு அமையவுள்ள மெண்டிஸ் நிறுவனமானது முறையற்ற வித்தில் வரி சேகரித்து தனது அனுமதி பத்திரத்தினையும் ரத்துச் செய்துக்கொண்ட நிறுவனமாகும்.

பில்லியன்  கணக்கில் பிணை முறி விவகாரத்தில் மோசடி செய்த நிறுவனம்தான் மேற்படி நிறுவனம் என்பதை சகலரும் அறிவார்கள்.  

அதனால் அந்த பணத்தினை இலங்கையில்  வைப்புச் செய்வது பாதுகாப்பானதல்ல என்பதை அறிந்துக்கொண்டு அவற்றை வெளிநாடுகளிடத்திலிருந்து புதிய நிறுவனங்களுக்கு இயந்திரம் வாங்கும் போர்வையில் அனுப்பி வைக்க முயற்சிக்கின்றனரா என்று எமக்கு சந்தேகம் தோன்றுகின்றது.

குதிரை பாய்ந்து ஓடிய பின்பு  அதற்கு தடையிடுவதில் அரத்தமில்லை என்றே அரசாங்கத்திற்கு கூறுகின்றோம் என்றார்