May 05

வித்தியா கொலை வழக்கு 12இற்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணையின் குற்றப் பகிர்வு பத்திரமும் அதனுடனான எனைய ஆவணங்களும் இம் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் மன்றில் உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கின் முதல் ஒன்பது சந்தேகநபரது விளக்கமறியல் காலத்தை யாழ்.மேல் நீதிமன்றால் ஒருவருடத்திற்கு மேல் நீடிக்க முடியாத நிலையிலும் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழக்கில் பிணை வழங்குவது தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இவ் சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புங்குடுதீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா பாடசாலை செல்லும் போது கடத்தி செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புனவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.