May 05

ஐ.பி.எல்.திருவிழா; இமாலய இலக்கை எட்டியது டெல்லி

ஐ.பி.எல். தொடரின் 42ஆவது போட்டியில்  டெல்லி டேர்டேவில்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. 

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறன்கிய சுமித்(9), மெக்கல்லம்(01) ஆட்டமிழந்தனர். 10 ஓட்டங்களுக்குள்  குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர்.  ரெய்னா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினார். முதலில் நிதானமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பின்னர் அதிரடி காட்டினார். இதனால் குஜராத் அணியின் ஓட்ட வேகம் கிடுகிடுவென உயர்ந்தது. 

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் எடுத்தது. பின்ச் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய ஜடேஜா 7 பந்துகளில் 18 ஓட்டங்கள்; எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

டெல்லி அணியில் ரபாடா, கம்மிங் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்தனர். இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 

கடின இலக்கை துரத்திய டெல்லி அணி நிதானமாகி விளையாடி வந்தது. டெல்லி அணியின் ஆரம்ப வீரரான சாம்சன் 31 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார், இவருடன் களமிறங்கிய கே.கே. நாயர் 12 ஓட்டங்களுடன்; ஆட்டமிழந்தார்,

பின் களமிறங்கிய ஆர்.ஆர். பேண்ட் அதிரிடியாக விளையாடி 43 பந்துகளில் 97 ஓட்டங்களைக் குவித்தார். 

டெல்லி அணியின் ஆன்டெர்சன் 18 ஓட்டங்களுடனும் எஸ்.எஸ் ஐயர் 14 ஓட்டங்களுடனும ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணி 17.3 ஓவர்களில் 214 ஓட்டங்களைக் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.