Mar 06

வெளிவிவகார அமைச்சர் கையொப்பமிட்டமையே காரணம்

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியளிப்பது நாட்டின் இறையாண்மைக்கு பாரிய சவாலாகும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலி மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறுகையில்

யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச நீதி மன்றம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கு அரசாங்கமே காரணமாகும். மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த முறை  அமெரிக்கா முன்வைத்த பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அந்த பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளார். அற்கமையவே சர்வதேச நீதிமன்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

அத்துடன் அமெரிக்காவின் இந்த பிரேரணையில்   கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. வெளிவிவகார அமைச்சரே இதனை தெரிவிக்கவேண்டும்.

ஆனால் சர்வதேச நீதி மன்றம் அமைக்கப்போவதில்லை, அதற்கு அனுமதியளிக்கமாட்டோம் என ஜனாதிபதி தெரிவிக்கின்றார். அத்துடன் சர்வதேச நீதிமன்றத்தை  அனுமதிக்க முடியாது என்றார்.