Nov 26

புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்கு துணையாக இருக்கும் படிக்கட்டுகள் - மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு -

வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டம், வந்தவாசி ரோட்டரி சங்கமும்  இணைந்து  நடத்திய தேசிய நூலக வார 50-ஆவது பொன் விழா பரிசளிப்பு விழாவில், பாடப்புத்தகங்கள் தாண்டிய பிற சமூக - அறிவியல் - வரலாறு - இலக்கிய புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்கு துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் குறிப்பிட்டார்.

        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். 

விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார். 

         தேசிய நூலக வார விழாவையொட்டி  நடத்தப்பட்ட  போட்டிகளில் வெற்றிப் பெற்றபள்ளி மாணவ - மாணவிகளை வாழ்த்தி, திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் ரா.கோகிலவாணி, வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.வெங்கடேசன் ஆகியயோர் வாழ்த்திப் பேசினர்.

        போட்டிகளில் வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார் பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது, " இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதிலும், செல்போனை கையில் வைத்துக்கொண்டு விளையாடுவதிலும் குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வம் புத்தகம் படிப்பதில் இல்லை. வீட்டிலுள்ள பெற்றோர்கள் கையில் புத்தகம் எடுத்துப்படிப்பதைப் பார்க்கும் போதுதான் குழந்தைகளுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் உண்டாகும்.

      நாம் வாழும் சமுதாயத்தைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளபுத்தகம் படிப்பது அவசியம். புத்தகங்கள் வழியாக இந்த சமுதாயத்தைப் பார்க்கும் போதுதான் புதிய பார்வையும் தெளிவும் கிட்டும். தினமும் நூலகங்களுக்கு செல்லும் நல்ல பழக்கத்தை பள்ளி வயதிலேயே மாணவர்கள் பழக்கிக் கொள்ள வேண்டும். புத்தகம் படிக்கும் பழக்கம் நிச்சயம் வாழ்வில் உங்களை இயன்ற வாய்க்கும்.

தினமும் புத்தகமா படிக்கிறவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலும் எதற்கும் முடிவெடுக்கும் திறனும் கூடுதலாக இருக்கும் என்பதை கண்டிருக்கின்றேன். படியுங்கள், வாழ்வின் சிகரத்தை அடைவீர்கள்" என்று குறிப்பிட்டார்.    

         விழாவில், தெள்ளார் அரசுக்கிளை நூலகத்தில் நூலகராகப் பணியாற்றி, தமிழக அரசின் நல்நூலகர் விருதுபெற்ற நூலகர் வி.கு.பெருமாளுக்கு , பாராட்டஸ் செய்யப்பட்டது. ருக்கு.5,000/- செலுத்திபெரும் புரவலராக ராஜம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மு.பத்மநாபன், ருக்கு.1000/- செலுத்தி புரவலராக இணைந்த சளுக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பு.நடராசன், ஆசிரியர்கள் ஆ.மயில்வாகனன், அ.சாந்தகுமார், ச.அண்ணாமலை, தெ.உஷாராணி ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

        விழாவில்,  ரோட்டரி சங்க நிர்வாகிகள் வீரராகவன், அல்லாபகஷ், கவிஞர் பா.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில், வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த நூலகர்கள்  பலரும் பங்கேற்றனர்.  வந்தவாசி அரசுக்கிளை நூலகர் ஜா.தமீம் வாணரி கூறினார்.   

    படக்குறிப்பு :

     வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டம், வந்தவாசி ரோட்டரி சங்கமும்  இணைந்து  நடத்திய தேசிய நூலக வார 50-ஆவது பொன் விழா போட்டிகளில்  வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ்.குமார்பரிசுகளை வழங்கினார். அருகில், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் ரா.கோகிலவாணி,நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ்,  வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.வெங்கடேசன் ,கிளை நூலகர் பூ.சண்முகம் ஆகியோர் உள்ளனர்.