Nov 25

எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்யும் முயற்சி

எதிர்வரும் சில தினங்களுக்குள் எதிர்க்கட்சி அரசியல் உறுப்பினர்களை கைது செய்யும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கைது செய்யும் திட்டம் ஒன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு கூறினார்.