May 05

இந்தியாவில் உலகின் உயரமான ரயில் பாலம்

பாரிஸ் ஈபிள் கோபுரத்தை விட உயரமான ரயில்வே மேம்பாலம் காஷ்மீரின் சினாப் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு இப்பாலம் கட்டி முடிக்கப்படும்போது உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே மேம்பாலமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஜம்முவின் கத்ராவில் உள்ள பக்கல் பகுதியையும் நகரில் உள்ள கவுரி பகுதியையும் இணைக்கும் 1.3 கி.மீ நீளம் கொண்ட இப்பாலம் வளைவான வடிவத்திலும், பாரிஸின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீற்றர் உயரத்திலும் ரூ.1,110 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து நாட்டின் பிற பகுதியை இணைக்கும் உதம்பூர் நகர் பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் சீனாவின் 275 மீற்றர் உயரம் கொண்ட ஷுய்பாய் ரயில்வே பாலத்தின் சாதனை முறியடிக்கப்படும்.