Nov 25

யாழில் இப்படியும் ஒரு சோகம்.. தாய் இறந்த செய்தி கேட்டு ஆசை மகனும் பலியானார்

யாழில் தாய் இறந்த செய்தியை கேட்ட ஏக்கத்தில் மகன் மரணமடைந்துள்ள  துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவமானது இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

தாயாருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக நேற்று  நள்ளிரவு வேளையில் வைத்திய சாலைக்கு கொண்டுசென்றுள்ளார் மகன்.

அங்கு தாயை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள் உடனடி சிகிச்சைகளை வளங்கியுள்ளனர்.

இருந்தும் தாயாரின் உயிரை வைத்தியர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அதிகாலை ஒரு மணியளவில் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தியை வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மகனுக்கு  வழங்கப்பட்டது.

இதனை கேட்ட கச்சேரியடி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பாலசிங்கம் செந்தூரன் என்ற மகன் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்து வைத்திய சாலையிலேயே மரணமடைந்துள்ளார் என தெரியவருகின்றது.