May 05

ரஜினியுடன் இணைவேன்; ராஜமௌவுலி

 நடிகர் ரஜினி காந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் பாக்கியசாலி. அவருக்கு ஏற்றது போன்ற தகுந்த கதை கிடைத்தால் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவேன் . என்று இயக்குநர் ராஜமௌவுலி தெரிவித்துள்ளார்.

பாகுபலி-2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தைப் பாராட்டி திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், “பாகுபலி-2 திரைப்படம், இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை பெற்று தரக்கூடிய படம்என்று குறிப்பிட்டிருந்தார்.


இதற்கு இப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி தனது நன்றியை தெரிவித்திருந்தார். மேலும் ரஜினியும், ராஜமவுலியும் இணைந்தால்அவதார்படத்தை மிஞ்சும் அளவுக்கு ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.