May 05

தினகரன் தனிக்கட்சி ? டி.டி.வி.பேரவை உதயம்

தினகரன் தனிக்கட்சியை தொடங்குவதற்கு முன்னோட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அவருக்கு ஆதரவாக டி.டி.வி.பேரவை உதயமாகியுள்ளது.

.தி.மு..வை கைப்பற்ற துடித்த சசிகலா கோஷ்டிக்கு சிறைவாசங்களே பரிசாக கிடைத்தன. இப்போது சசிகலா மற்றும் குடும்பத்தினர் ஒரு எம்.எல்.. கூட ஆதரிக்காத நிலைதான் இருக்கிறது.

இதில் மிகவும் நொந்துபோய் விரக்தியில் இருக்கின்றனர் சசி குடும்பத்தினர்டில்லியின் நெருக்கடியும் அடுத்தடுத்து தீவிரமாகும் நிலையில் இதில் இருந்து தப்பிக்க தனிக்கட்சியை தொடங்கலாம் என தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.

2019 லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதுதான் சசிகலா உறவினர்களின் தீவிர ஆலோசனையாக இருக்கிறதாம்.


இதன் முதல் கட்டமாக தினகரன் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டி.டி.வி. பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், மன்னார்குடி பகுதிகளில் டி.டி.வி.பேரவையின் பெயரில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.